
15ஆவது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 22 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன் (14), தேவ்தட் படிக்கல் (2) போன்றோர் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
கடந்த போட்டிகளில் தனியாக போராடி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த ஜாஸ் பட்லரும் 39 ரன்கள் எடுத்த போது ஹர்திக் பாண்டியாவின் பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய சிம்ரன் ஹெட்மயர் (11), ரவிச்சந்திர அஸ்வின் (6), ரியான் பிராக் (15), டிரண்ட் பவுல்ட் (11) மற்றும் ஓபட் மெக்காய் (8) என ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.