Advertisement
Advertisement
Advertisement

WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 02, 2024 • 08:08 PM

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினாலும், அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியை ஈட்டி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது. அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்ய குஜராத் அணி போராடும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 02, 2024 • 08:08 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • குஜராத் ஜெயண்ட்ஸ் - 01
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 01

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும்  இங்கு நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளிலுமே இறுதிப்பந்து வரை சென்றுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

குஜராத் ஜெயண்ட்ஸ்: பெத் மூனி (கே), லாரா வோல்வார்ட், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னர், தயாளன் ஹேமலதா, கேத்ரின் பிரைஸ், ஸ்நே ராணா, மன்னத் காஷ்யப், தனுஜா கன்வர், மேக்னா சிங்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங் (கே), ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசென், தனியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, மின்னு மணி, ராதா யாதவ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: பெத் மூனி
  • பேட்டர்ஸ்: மெக் லானிங், லாரா வோல்வார்ட், ஷஃபாலி வர்மா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜெஸ் ஜோனசென், ஆலிஸ் கேப்ஸி, மரிஸான் கேப், ஆஷ்லே கார்ட்னர், கேத்ரின் பிரைஸ்
  • பந்து வீச்சாளர்: மன்னத் காஷ்யப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement