ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அறிமுக சீசனிலேயே கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 16 பந்தில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் 14 ரன்களுக்கு நடையை கட்டினார்.
Trending
4ம் வரிசையில் இறங்கிய தேவ்தத் படிக்கல் ரன்னே அடிக்கமுடியாமல் திணறி 10 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 10 ஓவரில் 70 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணி, அதன்பின்னர் ரன்னே அடிக்க முடியாமல் திணறியது. ஹர்திக் பாண்டியாவும் ரஷீத் கானும் சேர்ந்து மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தியதுடன் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சஞ்சு சாம்சனை ஹர்திக் பாண்டியாவும், படிக்கல்லை ரஷீத் கானும் வீழ்த்த, ரன் வேகமெடுக்காத நெருக்கடியில் அடித்து ஆடியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பட்லர், பாண்டியாவின் பந்தில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ராஜஸ்தானின் நம்பிக்கையாக திகழ்ந்த ஹெட்மயரையும் பாண்டியா வீழ்த்த, ராஜஸ்தானின் மொத்த நம்பிக்கையும் அத்துடன் முடிந்தது.
அஷ்வின் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரியான் பராக் 15 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 19வது ஓவரை யஷ் தயால் அருமையாக வீசி 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் ஷமி 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே அடித்து, 131 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத்துக்கு நிர்ணயித்தது.
அதன்படி எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 5 ரன்னிலும், மேத்யூ வேட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் 34 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர், சுப்மன் கில்லுடன் இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் 18.1 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now