ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இம்முறையும் வெற்றி பெறுவதுடன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் வழக்கமாக எனது வீட்டைச் சுற்றி எங்காவது பேட்டிங் செய்துகொண்டிருப்பேன். இல்லையெனில் எனது பேட்டுடன் தனியாக சிறுது நேரம் பயிற்சி எடுத்துகொண்டிருப்பேன்.
ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் ஒரு மனசாட்சியுடன் பேட்டிங் செய்வதை சிறிது நேரம் விட்டுவிட முடிவு செய்தேன். அதிலிருந்து நான் இப்போது வரையிலும் ஒரு பந்தை கூட அடிக்கவில்லை. இந்த இடைவெளி நன்றாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, எல்லாம் உடனடியாக சரியாகிவிட்டது. நான் நன்றாக நகர்ந்து கொண்டிருக்கிறேன், நான் வலுவாக உணர்கிறேன், இப்போது அதில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன்.
பொதுவாக இந்த இடைவேளை எப்படி வேலை செய்கிறது என்பது என்னுடைய முதல் வெற்றியாக இருக்கும். என்னுடைய இரண்டாவது வெற்றி நான் இதிலிருந்து எப்படி மீண்டு சிறப்பாக வருகிறேன் என்பதாகும். ஆனால் அவை இரண்டும் மிகவும் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். மேலும் இந்த இடைவேளையால் ஏதும் மாறாது என்று நினைக்கிறேன். அதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் வலைகளில் மணிக்கணக்கில் செலவிட வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முதுகெழும்பாக பார்க்கப்படும் ஸ்டீவ் ஸ்மித் இதுநாள் வரையிலும் 116 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்கள் மற்றும் 41 அரைசதங்களுடன் 10271 ரன்களை விளாசியுள்ளார். இதனால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now