
Harbhajan Singh and Geeta Basra blessed with baby boy (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணிக்காக 1998ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை விளையாடிய இவர், தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 103 டெஸட், 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் விளையாடி 700க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் அசத்தியுள்ளார்.
இந்நிலையில், ஹர்பஜன் சிங் - கீதா பாஸ்ரா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு ஏற்கெனவே ஹினாயா ஹீர் பிளாஹா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.