
Hardik Pandya Bowled In Intra-Squad Game, Final Call Yet To Be Made (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் இலங்கை சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பந்துவீசுவதை பார்க்க நன்றாக உள்ளது என சக அணி வீரர் சூர்யகுமார் யதாவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்,“இலங்கை தொடருக்கு முன்னதாக நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வலைகள் மற்றும் பயிற்சி போட்டிகளில் பந்துவீசினார். காயத்திற்கு பிறகு அவர் மீண்டும் பந்துவீசுவதை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.