ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் குவலிஃபையர்-1 போட்டியில் குஜராத் டைட்டனஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை வென்று நேரடியாக ஃபைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிலும் நான்காம் வரிசையில் களமிறங்கி அசத்தியுள்ளார்.
Trending
நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 453 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி -45.30. ஸ்டிரைக் ரேட் - 132.84. பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி 7.74 என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரை முதன் முதலாக கேப்டனாக அறிவித்ததும் கிரிக்கெட் விமர்சகர்களின் புருவத்தை உயர்த்தியது. ஆனால் அவர் சிறப்பாக செயல்பட்டு அணியை இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “குஜராத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வெறி அவருக்கு உள்ளது. அவரது திறமையின் மீது அவருக்கு அபாரமான நம்பிக்கையுள்ளது. ஆட்டத்தை நன்றாகக் கணிக்கிறார்.
அவர் எப்போதுமே பேட்டிங் வரிசையில் மேலே விளையாட ஆசைப்படுவார். நம்பர் 4 இடத்தில் விளையாடும் வீரராகவும் அவரால் விளையாட முடியும். அவர் ஆட்டத்தின் போக்கையும், ஆடுகளத்தின் தன்மையையும் மற்றும் அவரது பங்கையும் நன்குப் புரிந்து விளையாடக் கூடியவர்.
அந்த அணிக்குத் தேவையானதை அவர் செய்கிறார். அவரது பேட்டிங் அவரது பொறுப்பை வெளிக்காட்டுகிறது” என ரவி சாஸ்திரி புகழ்ந்து கூறியுள்ளார்.
இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகின்றது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதும்.
அந்த இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் வரும் மே 29ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now