
இந்திய கிரிக்கெட் அணியின் தலைச் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ளார்
இதனால் இந்திய கிரிக்கெட் அணியிலும் சரி, மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சரி ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் இல்லை. அவருக்கு மாற்றாக தமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். இதனால் இந்திய அணியில் புதிய ஆல் ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் உருவெடுத்துள்ளார்.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் தம்மை அணியில் சேர்க்க வேண்டாம் என்று தேர்வுக் குழுவினருக்கு ஹர்திக் பாண்டியா கோரிக்கை வைத்தார். இதனை எற்று கொண்ட தேர்வுக்குழு, பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ள வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான தொடருக்குள் தயாராகவேண்டும் என்று கெடு விதித்தது.