
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியருந்த புஷ்பா திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், என எதை திறந்தாலும், புஷ்பா படம் தொடர்பான காணொளிகள் அதிகமாக தென்படுகிறது. அந்த அளவுக்கு பிரபலங்கள் வரை, புஷ்பா பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒரு வழி பண்ணியுள்ளது. இந்திய அணி வீரர்களான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர், அல்லு அர்ஜுன் நடனம் மற்றும் வசனங்கள் பேசும் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.
அதே போல, ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் கூட, ஸ்ரீவள்ளி பாடலுக்கு, காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், தன்னுடைய மகள்களை வைத்து, 'சாமி சாமி' என்ற புஷ்பா படத்தின் பாடலுக்கும் நடனமாட வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.