ஐபிஎல் 2022: என்சிஏவிற்கு விரைந்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் வீரர்களை அழைத்து பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
ஆனால் பெங்களூரூ தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள சில வீரர்கள் மட்டும் இன்னும் ஐபிஎல்-க்கு புறப்படவில்லை. இதற்கு காரணம் பிசிசிஐ போட்ட கண்டிஷன் தான்.
Trending
ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும், அதனை மறைத்துத் தொடர்ந்து போட்டிகளில் விளையாட வைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளன. இதனால் சர்வதேச போட்டிகளில் பாதிப்படைகிறது. கடந்த சீசனின் போது ஹர்திக் பாண்ட்யா இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கினார். ஏனென்றால் கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக மும்பை அணி அறிவித்தது.
இதனை நம்பிய பிசிசிஐ, டி20 உலகக்கோப்பை தொடரில் அவரின் பெயரை சேர்த்தது. பின்னர் அவரால் பவுலிங் வீச முடியவில்லை என்ற உண்மை வெளியானது. இந்த தவறை மும்பை அணியும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனால் இந்தாண்டு இனி ஏன்சிஏ வில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடருக்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆல்ரவுண்டராக பெயர் கொடுத்துள்ள ஹர்திக் பாண்டியாஅ பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே தனது உடற்தகுதியை நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லையென்றால் அதுவரை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை என தடலாடியாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஹர்திக் பெங்களூருவுக்கு அவசர அவசரமாக சென்று தயராகி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, மும்பை அணி மீது ஹர்திக் பாண்டியா கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. அவர்களால் தான் இந்த நிலைமை வந்ததாக கூறி, சமூக வலைதளங்களில் மும்பை அணியை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். இது பெரும் பேசுப்பொருளாகியுள்ளது. குஜராத் அணி பெரிது நம்பிக்கை வைத்து பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியுள்ளது. இதனை அவர் சரியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now