
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பண்டியா பந்துவீச முடியாமல் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். எனினும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்த பிசிசிஐ, டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுத்து ஆச்சரியம் கொடுத்தது.
இதுகுறித்து பேசியிருந்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, டி20 உலகக் கோப்பையின்போது ஹார்திக் பாண்டியா நிச்சயம் பந்துவீசுவார். அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் பவுலிங் வீச சம்மதித்ததால் தான் அணியில் எடுத்தோம் என்பது போல கூறினார். இதனால் பாண்டியாவின் பவுலிங் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் முதல் போட்டியிலேயே சுக்கு நூறாக அதனை உடைத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் ஹர்திக் ஒரு ஓவரை கூட வீசவில்லை. முழு நேர பேட்ஸ்மேனாக செயல்பட்டார். அதன்பின்னர் மற்ற லீக் போட்டிகளிலும் பெரியளவில் பவுலிங் செய்யாததால் அவர் மீது விமர்சனங்கள் குவிந்தன.