
இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக விலங்கி வந்த ஹர்திக் பாண்ட்யா தற்போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காயத்தால், தற்போது வரை அவர் முழு உடற்தகுதியுடன் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா முழு உடற்தகுதி பெறவில்லை என்றாலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியில் நம்பி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் இரண்டிலுமே பேட்டிங், பவுலிங் என சொதப்பி வருகிறார். குறிப்பாக அவரி சரிவர பந்துவீசாமல் இருப்பது தான் தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்த பாண்டியாவுக்கு, டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் மொத்தமாக 4 ஓவர்களை மட்டுமே வீசிய அவர், 40 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டை கூட எடுத்துக்கொடுக்கவில்லை.