
Cricket Image for இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு கரோனா! (Image Source: Google)
இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னதாக லேசான கரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிய அவர், தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனை முடிவில், ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.