
கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வெங்கடேஷ் ஐயர் இம்முறை அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
கடந்த முறை, கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் அடி பாதளத்தில் இருந்த இறுதிப் போட்டி வரை சென்றது. அதற்கு காரணம் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டமும், பவுலிங்கும் தான். வெங்கடேஷ் ஐயரின் இந்த அபார ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் அவரை தேடி வந்தது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவரை வெங்கடேஷ் ஐயர் ஓரங்கட்டினார்.
ஆனால் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெங்கடேஷ் ஐயர் தனது பேட்டிங்கில் முன்பு போல் விளையாடவில்லை. நடப்பு சீசனில் 9 போட்டியில் விளையாடி 132 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். அந்த அரைசதமும் வேகமாக அடித்த ரன்கள் கிடையாது. இதனால் கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனிலே அவரது இடம் கேள்விக்குறியாகி விட்டது.