Advertisement

தான் பந்துவீசியதில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் இவர்தான் - ஹசன் அலி ஓபன் டாக்!

தான் பந்துவீசியதிலேயே யார் கடினமான பேட்ஸ்மேன் என்பது குறித்து ஹசன் அலி தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 06, 2021 • 22:42 PM
Hasan Ali Reveals The Toughest Batsman Who Has 'Troubled' Him a Lot
Hasan Ali Reveals The Toughest Batsman Who Has 'Troubled' Him a Lot (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹசன் அலி. 26 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை, 54 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் ஆடி மொத்தமாக 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.மேலும் பாகிஸ்தான் அணிக்காக முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், தான் பந்துவீசியதிலேயே யார் கடினமான பேட்ஸ்மேன் என்பது குறித்து ஹசன் அலி தெரிவித்துள்ளார். 

Trending


இதுகுறித்து பேசியுள்ள ஹசன் அலி, “நான் நிறைய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி இருக்கிறேன். அவர்களில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீச மிகக் கடினமான பேட்ஸ்மேன். ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைகளில் அபாரமாக ஆடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித்துக்கு பந்துவீச எனக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் அவரது நாளாக இருந்திருந்தால், எனது பவுலிங்கை வெளுத்து கட்டியிருப்பார்.

ரோஹித் சர்மா மிக அபாரமான வீரர். மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை அடிக்க வல்லவர். பந்தின் லைனுக்கு வந்து, பந்தை மிக தாமதமாக ஆடுவார். அவரைப் போல் விளையாடுவது எளிதல்ல. அனைவராலும் அதை ஆடி விட முடியாது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement