IND vs SL: தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் தொடங்குகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, கரோனாவால் பாதிக்கப்பட்டார். 3-வது டி20 தொடங்கும் முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததால் டி20 தொடரிலிருந்து விலகினார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரு டி20 ஆட்டங்களிலும் 3/38, 2/33 எனச் சிறப்பாகப் பந்துவீசினார்.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஹசரங்கா இன்னும் கரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து நாளை முதல் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வனிந்து ஹசரங்காவை ரூ. 10.75 கோடிக்கு ஆர்சிபி அணி தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now