
Have concussion with memory loss, but I'll be fine: Faf du Plessis (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் நேற்றைய போட்டியின் போது, பெஸ்வர் ஸால்மி அணிக்காக விளையாடி வரும் ஃபாஃப் டூ பிளெஸிஸ் சக வீரர் மீது மோதி மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து அவரை பரிசோதித்த அணியின் மருத்துவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிசீலித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டூ பிளெஸிஸிற்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர தற்போது மருத்துவமனையிலிருந்து தனது ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளார். இத்தகவலை ஃபாஃப் டூ பிளெஸிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.