
Hayley Matthews Smashes Ton As West Indies Bag ODI Series Against Pakistan (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஒமைமா சொஹைல் அரைசதம் அடித்து உதவினார். ஆனால் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 49 ஓவார்களில் பாகிஸ்தான் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் அதிரடியாக விளையாடி சதமடித்ததுடன், அணியையும் வெற்றி பெற செய்தார்.