
‘He has potential to take the game away in whiff of a breath’: Karthik (Image Source: Google)
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் புகழ்ந்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டி கடந்த 14 வருடங்களாக நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் ஏராளமான டி20 அனுபவங்களைக் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 150 முதல் 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளது.