இவர் தான் இந்திய அணியின் கேம் சேஞ்ஜர் - ஜாகீர் கான்!
தென்ஆப்பிரிக்கா தொடரில் முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி, கேம் சேஞ்சராக முகமது ஷமி திகழ்வார் என ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர்களின் இந்தியாவில் ஜாகீர்கானும் ஒருவர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் முகமது ஷமி பந்து வீச்சில் முக்கிய வீரராக திகழ்வார் என ஜாகீர் காஅன் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர் “செஞ்சூரியனில் நீங்கள் விளையாடும்போது, சூழலுக்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவது சவாலான ஒன்று.
ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது பெரும் தடையாக இருக்காது. ஏனென்றால், ஆடுகளங்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக இருக்கும். இந்திய பந்து வீச்சாளர்கள் சாவல்களை எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன்.
முகமது ஷமியின் வெற்றியை பார்க்கும்போது எனக்கு மிகப்பெரியதாக தெரிகிறது. அவருடைய பயணம் மிகச் சிறந்தது. அனைத்து இந்திய பந்து வீச்சாளர்களும் சிறந்த பவுலராக முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
முகமது ஷமி அபாரமான சாதனை பெற்றுள்ளார். பந்து வீச்சுக்கு தலைமை தாங்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார். முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்துவதுதான் அவருடைய சிறப்பம்சம்.
அவர் கேம்-சேஞ்சிங் பவுலர். மற்ற பந்து வீச்சாளர்களும் ஒரு ஸ்பெல்லில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினால் போட்டியில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு இருக்கும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அந்த திறமை ஷமியிடன் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர் என்றால் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை’’ என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now