
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் 35 வயது சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இதில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி - 6.66.
இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் அஸ்வின் தேர்ச்சியடைந்துள்ளார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கு அஸ்வினைத் தேர்வு செய்தது அபாரம். கடந்த சில வருடங்களாக டி20 லீக்குகளில் அஸ்வின் நன்றாக விளையாடி வருகிறார். சஹாலுடன் இணைந்து பந்துவீசும்போது அஸ்வினை எனக்குப் பிடிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் வேலையே விக்கெட்டுகளை எடுப்பது தான், தென் ஆப்பிரிக்காவுக்காக ஷம்சி, மஹாராஜ் அதைச் செய்கிறார்கள்.