Advertisement
Advertisement
Advertisement

இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவார் தான் - இர்ஃபான் பதான் பாராட்டு!

முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இந்திய அணியின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலாய் கிடைத்தவன் என சூர்யகுமார் யாதவை பாராட்டி உள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 18, 2021 • 14:08 PM
'He is our answer to that question': Irfan Pathan names Team India's '360-degree' player
'He is our answer to that question': Irfan Pathan names Team India's '360-degree' player (Image Source: Google)
Advertisement

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டி நேற்று ஜெய்பூரில் நடைபெற்றது. அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இதே டி20 முறை விளையாட்டில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி நேற்று தனது வெற்றியால் மீண்டு வந்துள்ளதை காட்டியுள்ளது. நேற்றய முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அனைவரின் கவனங்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

நேற்றைய போட்டியில் சுழன்று சுழன்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வலது கை பேட்ஸ்மேன் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது. ஆனால், நேற்றைய டி20-யில் மூன்றாவது வீரர் ஆக களம் இறக்கப்பட்ட சூர்யகுமார் புது கேப்டன் ரோகித் சர்மா உடன் இணைந்து அசத்தலான கூட்டணியை உருவாக்கினார்.

Trending


சூர்யகுமார்- ரோகித் சர்மா கூட்டணி மட்டும் 59 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளனர். நேற்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகன் ஆக சூர்யகுமார் அங்கீகரிக்கப்பட்டார். 

மேலும், முன்னாள் இந்திய வீரர் ஆன இர்ஃபான் பதான், “அபார பேட்டிங் திறமை கொண்ட சூர்யகுமார் யாதை இனிமேல் ‘360 டிகிரி’ வீரர் என்றே அழைக்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் முக்கிய இடம் பிடிப்பாரா என்பதை இப்போது கூற முடியாது. அதற்கு இன்னும் காலம் ஆகும். ஆனால், நிச்சயமாக சூர்யகுமாரின் எதிர்காலம் பிரகாசம் ஆக இருக்கிறது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். 

டி20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் சரியான ஃபார்மில் இல்லை. அங்கு அவருக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் உபயோகப்படுத்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம். ஆனால், நல்ல பேட்ஸ்மேன் என்ற பெயரை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார். உள்ளூர் ஆட்டங்களில் எல்லாம் சூர்ய குமார் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Also Read: T20 World Cup 2021

ஐபில் போட்டிகளில் தனது ஆட்டத்தில் ஒரு நல்ல பெயரைப் பெற்றுவிட்டார். அதனால் அவரை நான் தரமான பேட்ஸ்மேன் என்றே கூறுவேன். இந்திய அணியின் 360 டிகிரி வீரர் யார்? என்ற கேள்விக்கு சூர்யகுமார் விடையாக வந்துள்ளார் என்று என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் எந்த திசையிலும் அவரால் பந்தை அடிக்க முடியும். மேலும், அத்தனை திசைகளில் இருந்து பந்துகள் வந்தாலும் அவருக்கு சமாளிக்கும் திறன் இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களை நல்ல சமாளிக்கிறர். இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தன்னுடைய முழு திறமையையும் நமக்கு காண்பித்துவிட்டார்” எனப் பாராட்டி உள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement