
'He just doesn't bowl bad balls': Ashwin's heroics impresses Martin Guptill (Image Source: Google)
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்வானார்.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். நன்கு விளையாடி வந்த மார்க் சாப்மேனை வீழ்த்திய அஸ்வின், அதே ஓவரில் கிளென் பிளிப்ஸை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் 14ஆவது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த நியூஸிலாந்து ஒரே ஓவரில் அஸ்வினிடம் இரு விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. இறுதியில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளுடன் குறைவான ரன்கள் கொடுத்தது அஸ்வின் மட்டுமே.