
கடந்த ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. அந்த தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 407 ரன்களை இலக்காக கொண்டு ஆடியது.
ரஹானே 4 ரன்களில் வீழ்ந்த பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த புஜாரா 205 பந்துகள் எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அந்த 3ஆவது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் அப்போட்டியில் 'நான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம்' என்று ரிஷப் பண்ட் தன்னிடம் புலம்பியதாக ரஹானே கூறியுள்ளார்.