
'He’s not fit, that’s why he’s not there in the team' - Ganguly on Pandya (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் உடற்தகுதி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியா இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் தேர்வுக்குழுவினர் தரப்பில் இதுபற்றி ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.