விஜய் ஹசாரே கோப்பை: உ.பி.யை முதல் முறையாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஹிமாச்சல பிரதேசம்!
உத்திர பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிப் போட்டியில் ஹிமாச்சல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் காலிறுதிச்சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஹிமாச்சல பிரதேசம் - உத்திர பிரதேசம் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், இறுதியில் ரிங்கு சிங், புவனேஷ்வர் குமார் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 207 ரன்களைச் சேர்த்தது.
Trending
இதில் ரிங்கு சிங் 76 ரன்களையும், புவனேஷ்வர் குமார் 46 ரன்களையும் சேர்த்தனர். ஹிமாச்சல் அணி தரப்பில் வினய் கலெடியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஹிமாச்சல் அணியில் ஷுபம் அரோரா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரசாந்த் சோப்ரா எதிரணி பந்துவீச்சை விளாசி தள்ளினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிரசாந்த் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்களில் ஆட்டமிழந்து நூழிலையில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனாலும் அடுத்து களமிறங்கிய நிகில் கங்டா அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன் மூலம் ஹிமாச்சல் அணி 45.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்திரபிரதேச அணியை வீழ்த்தியது.
மேலும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் உத்திரபிரதேச அணிக்கெதிராக ஹிமாச்சல் அணியின் முதல் வெற்றியாகவும் இது அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஹிமாச்சல் அணி அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now