
Hobart's Bellerive Oval Set To Host The Fifth Ashes Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கரோனா பரவல் அச்சுறுத்தலினால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அரசாங்கம் தீவிர நெறிமுறைகளை அமல்படுத்தியது. இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டத்தை அடுத்து, பெர்த் டெஸ்ட் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.