
Hughes, Christian power Sixers to victory in Sydney derby (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ர சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 16ஆவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சிக்சர்ஸ் அணி டேனிய ஹூக்ஸ், டேன் கிறிஸ்டியனின் அதிரடியான ஆட்டத்தினால் 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஹூக்ஸ் 50 ரன்களையும், டேன் கிறிஸ்டியன் 41 ரன்களையும் எடுத்தனர். தண்டன் அணி தரப்பில் டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.