
Hyderabad Move Into Semis With Contrasting Wins In Syed Mushtaq Ali Trophy (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் 4ஆவது காலிறுதிப்போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
ஆனால் 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது.