
தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.
இதையடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தத் தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி நேற்று முன்தினம் அந்த பதவியிலிருந்து விலகினார். இதை அடுத்து தற்போது நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஏற்கனவே விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.