
I can bowl in any crisis - Sai Kishore (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 24 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 31 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெகதீசன் 27 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி ) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் அதிகபட்சமாக 39 ரன் எடுத்தார்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு சாய்கிஷோரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது.