
ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பைக்கு இருக்கும் ரசிகர்கள் மற்ற அணிகளின் ரசிகர்களை விட மிகுந்த உணர்ச்சி மிக்கவர்கள். தங்கள் அணியின் வெற்றியை அதிகமாக கொண்டாடி தீர்ப்பவர்கள்.
மும்பை அணியில் ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஏரளாமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதேபோல் மும்பை அணியின் ரசிகர்களை தனது மந்திர பந்துவீச்சால் கட்டி போட்டவர்தான் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா. 2019ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத்த லசித் மலிங்காவை மும்பை ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.
மும்பை அணி வென்ற 5 ஐபிஎல் கோப்பைகளில் 4 கோப்பைகளை வெல்ல அணியில் முக்கிய பங்காற்றியவர் லசித் மலிங்கா. மும்பை அணியையும், லசித் மலிங்காவையும் பிரிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு தொடக்க காலத்தில் இருந்து அவர் மும்பை அணிக்காக பங்காற்றியுள்ளார்.