Advertisement

இந்திய அணியின் பலம் இதுதான் - புஜாரா

இந்திய அணியின் பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதான் என சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

Advertisement
I hope fast bowlers can give us 20 wickets in every Test against South Africa, says Cheteshwar Pujar
I hope fast bowlers can give us 20 wickets in every Test against South Africa, says Cheteshwar Pujar (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 19, 2021 • 03:32 PM

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்று அடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த டெஸ்ட் தொடரானது வரும் 26ஆம் தேதி முதல் துவங்குகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 19, 2021 • 03:32 PM

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் பலம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் பலமே நமது வேகப்பந்து வீச்சாளர்கள் தான். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டில் இந்திய அணி விளையாடும் போது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எந்த நாட்டில் விளையாடினாலும் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை வீழ்த்துகின்றனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் நமது வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருந்ததே அதற்கு எடுத்துக்காட்டு. இந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் இந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களது 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

அதற்கான வல்லமையும் நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் உள்ளது. அயல்நாட்டில் இந்திய அணி வெற்றி பெறும் போதெல்லாம் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு அதிகம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement