
‘I thought that Rishabh Pant is like MS Dhoni’ – Inzamam-ul-Haq criticizes (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது. முன்னதாக நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் பேட்டிங் கேள்விக்குறியானது.
ஏனெனில் முன்வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடியும், நடுவரிசை வீரர்களால் அதனை ஏன் செய்ய முடியவில்லை என்பதுதான் அக்கேள்வி. அதிலும் குறிப்பாக எப்போது அதிரடியாக விளையாடும் ரிஷப் பந்த் நேற்றைய போட்டி 17 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.