தோனி தன்னை பாராட்டியதில் ஆச்சரியமில்லை - சாய் கிஷோர்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் இளம் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோரும் ஒருவர். 25 வயது சாய் கிஷோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 வருடம் நெட் பவுலராக இருந்தவர். இந்த முறை குஜராத் அணி 3 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3 ஆட்டங்களில் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரு ஆட்டங்களில் அவர் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்கப்படவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளைக் கொடுத்தார். 3 ஆட்டங்களில் எகானமி - 5.80
Trending
இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை என சாய் கிஷோர் கூறியுள்ளார்.
தோனி உங்களது பந்து வீச்சைக் குறித்து பாராட்டியது எப்படி இருந்தது என கேள்வி கேட்ட போது, “ உண்மையில் எனக்கு பெரிதாக ஆச்சர்யமில்லை. எனக்கு எனது பந்து வீசும் திறன் பற்றித் தெரியும். நான் சிஎஸ்கேவுக்கு விளயாடினாலும் விளையாடவிட்டாலும் எனக்கு என் மீதான சந்தேகம் இருந்ததில்லை. உள்ளூர் போட்டிகளில் 40-45 போட்டிகள் விளையாடி இருக்கிறேன்.
அதனால் எனக்கு அனுபவம் இருக்கிறது. சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக வருந்தியதில்லை. உள்ளூர் போட்டிகளில் நன்றாகவே விளையாடி வருகிறேன்” என கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now