
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஷதாப் கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் கடந்த மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சதம் விளாசி அசத்தியிருந்தார். அதேசமயம் மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஷதாப் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இருதுறையிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இருவரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.