
ICC Names Shaheen Afridi As Men's Cricketer Of 2021 (Image Source: Google)
கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தேர்வானார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வாகியுள்ளார்.
முக்கியமான இரு விருதுகளை வென்றுள்ள பாகிஸ்தான், பெரிய விருது ஒன்றையும் தட்டிச் சென்றுள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தேர்வாகியுள்ளார்.
கடந்த 2021இல் விளையாடிய 36 சர்வதேச போட்டிகளில் 78 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஷாஹீன் அஃப்ரிடி. டி20 உலகக் கோப்பைப் தொடரில் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.