பெங்களூரு பிட்சுக்கு பிளோ ஆவரேஜ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசுவாமி ஆடுகளம் “சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு அட்டமாக பெங்களூருவிலுள்ள எம்.சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இலங்கையை வீழ்த்தி அசத்தியது. மேலும் இப்போட்டியானது இரண்டரை நாள்களில் முடிவடைந்தது.
Trending
மேலும் இப்போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் ஏகப்போகத்திற்கு திரும்பியதால் ஆட்டம் இரண்டரை நாளில் முடிந்து சுவாரசியம் இல்லாமல் போனது.
இந்நிலையில், ஐசிசி வழிகாட்டுதலின்படி, அந்த சின்னசுவாமி பிட்ச் சராசரிக்கும் கீழான பிட்ச் என்று போட்டி நடுவர் ஜவாகல் ஸ்ரீநாத் ரிப்போர்ட் கொடுத்துள்ளார். அதனால் ஒரு டீமெரிட் புள்ளியும் சின்னசுவாமி பிட்ச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பிட்ச்சும் மிகச்சிறப்பு, சிறப்பு, சராசரி, சராசரிக்கு கீழ், மோசம், படுமோசம் என மதிப்பிடப்படும். இதில் சராசரிக்கு கீழான பிட்ச் என்று ரிப்போர்ட் செய்யப்பட்டால் ஒரு டீமெரிட் புள்ளியும், பிட்ச் மோசம் என்றால் 3 டீமெரிட் புள்ளியும், படுமோசமான பிட்ச் என்றால் 5 டீமெரிட் புள்ளியும் வழங்கப்படும்.
5 டீமெரிட் புள்ளி பெறும் மைதானத்தில் ஓராண்டுக்கு சர்வதேச போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும். 10 டீமெரிட் புள்ளிகளை பெறும் மைதானத்தில் 2 ஆண்டுகள் சர்வதேச போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now