Advertisement
Advertisement
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவில் தான் முடியும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் தான் முடியும் என்றும், இனிமேல் இந்த போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 22, 2021 • 13:59 PM
'ICC Should Think And Then Take A Decision': Gavaskar Wants A Formula To Decide WTC Final Winner
'ICC Should Think And Then Take A Decision': Gavaskar Wants A Formula To Decide WTC Final Winner (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 2ஆம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டமான ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ஆம் நாள் ஆட்ட முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது.

Trending


வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ஆம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக முதல் செசன் முழுவதும் பாதிக்கப்பட்டது. லேசான சாரல் மழை தொடர்ந்து நீடித்ததால் 4ஆம் நாள் ஆட்டம் முழுவதுமே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

நாளை கடைசி நாள் ஆட்டம் மற்றும் ரிசர்வ் டே-வான ஆறாம் நாளும் போட்டி நடந்தாலும் இனிமேல் இந்த போட்டியில் முடிவு கிடைப்பது கடினம், எனவே கண்டிப்பாக டிராவில் தான் முடியும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதே கருத்தை தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் தான் முடியும். எனவே கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். முதல் முறையாக ஒரு உலகத்தொடர் முடிவில்லாமல் முடியவுள்ளது.

கால்பந்து போட்டியெல்லாம் டிராவில் முடிந்தால், வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி ஷூட் அவுட்ஸ் உள்ளது. அதேபோல டென்னிஸிலும் உள்ளது. அதுபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு எதாவது வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இந்த ஃபைனலில் இன்னும் 2 நாட்களில் 3 இன்னிங்ஸ் ஆடப்பட வேண்டும். இரு அணிகளும் படுமட்டமாக ஆடினாலன்றி, அதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement