
ICC T20 World Cup: Sachin Tendulkar lauds Namibia after win over Sri Lanka (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் கத்துக்குட்டி அணியுடனான நமிபியாவை இலங்கை அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஜென் பிராலிங், மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இதனால் நமிபியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் தடுமாறியது.
நமிபியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இறுதியில் இலங்கை அணி 19-வது ஓவரில் 108 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தது.