
ICC Test Championship Points Table 2022 (Image Source: Google)
கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் தொடரை தொடங்கியது. இதில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். எனவே அனைத்து அணிகளும் முதலிரண்டு இடங்களை பிடிக்கத்தான் போராடும்.
அதன்படி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மேலும் இத்தொடரானது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் அமைந்தது.