
ICC Test Rankings: Jadeja rises to No. 2 in all-rounders list (Image Source: Google)
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசை நேற்று வெளியானது. இதில் சில மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத போதிலும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்காததால் அவருக்கு புள்ளிகள் குறைந்ததன் அடிப்படையில் ஜடேஜா இரண்டாமிடத்திற்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார். ஜூன் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், முதலிடத்தில் உள்ள ஜேசன் ஹோல்டரைப் பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.