
ICC U19 CWC 2022 - England Beat Canada By 106 Runs (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - கனடா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் டாம் பிரஸ்ட், ஜார்ஜ் பெல் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் டாம் பிரஸ்ட் 93 ரன்களையும், ஜார்ஜ் பெல் 57 ரன்களையும் சேர்த்தனர். கனடா அணி தரப்பில் கைரவ் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.