
ICC U19 CWC 2022 - England Beat UAE By 189 Runs (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜார்ஜ் தாமஸ் - பெத்தல் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் டாம் பிரஸ்ட் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இதில் சதமடித்த டாம் பிரஸ்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 154 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்தது.