
ICC U19 CWC 2022 - Sri Lanka Beat Australia By 4 wickets (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் காம்பெல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்காததால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் கேப்டன் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.