Advertisement

‘கேப்டன் கூல்’ தோனி எடுத்த சில அற்புதமான முடிவுகள் குறித்த காணொளி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட்டில் மேற்கொண்ட சில அற்புதமான முடிவுகள் குறித்த காணொளியை அவரது பிறந்தநாளான இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 07, 2021 • 12:29 PM
ICC Wishes for MS Dhoni as 'Captain cool' turns 40
ICC Wishes for MS Dhoni as 'Captain cool' turns 40 (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தன்னுடைய 40ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தோனியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் வைத்து வருகின்றனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிக்கு பின்பு தல தரிசனம் எப்போதும் கிடைக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாகி இருந்தனர். ஆனால் 2020 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தன்னுடைய ஸ்டைலில், இன்ஸ்டாவில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். ரசிகர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Trending


ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மஞ்சள் ஜெர்சி மூலம் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விருந்து படைத்து வருகிறார் தோனி. தோனி தனியொரு வீரரை காட்டிலும் கேப்டன்சியில் அவர் மேற்கொண்ட சில தனித்துவ முடிவுகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. அவர் போட்டியின்போது மைதானத்தில் எடுத்த சில சாதுர்யமான முடிவுகள் இந்தியா அணிக்கு பல முறை வெற்றியை சாத்தியமாக்கியது.

 

இந்நிலையில், தோனியின் பிறந்தநாளில் அவரை கவுரவிக்கும் விதத்தில் ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "கேப்டன் கூல்" என வர்ணித்து கிரிக்கெட்டில் அவர் எடுத்த சில அபாரமான முடிவுகளை உள்ளடக்கிய காணொளியை வெளியிட்டிருக்கிறது. ஐசிசியின் இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement