தினேஷ் கார்த்திக்கு ஆதரவை வழங்கிய சுனில் கவாஸ்கர்!
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் கம்பீர், "தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணிக்கு தேவையில்லை" என கூறியதற்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளிலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கு ப்ளேயிங் லெவனில் இடமில்லை எனில் அவரை அணியில் தேர்ந்தெடுப்பதே வீண் என சமீபத்தில் முன்னாள் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் கம்பீர் கூறினார்.
Trending
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதினை வென்றார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றாலும் இந்தியா தற்போது 2-2 க்கு என்ற கணக்கில் தொடரை சமநிலையில் வைத்துள்ளது.
தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தொடர்ந்து ஆதரவு அளித்து பேசிவருகிறார்.
தினேஷ் கார்த்திக் பற்றி பேசிய அவர், “அவரை எப்படி அணியில் சேர்க்கலாம் என்று சிலர் பேசுவது தெரியும். அவரால் விளையாட முடியாது என எப்படி கூறுகிறீர்கள்? அவர்தான் தேவையான வீரர். பெயரையோ புகழையோ விட்டு தள்ளுங்கள் அவரது விளையாட்டை பார்த்து தேர்ந்தெடுங்கள்.
அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடப்பதில்லை. 6ஆவது 7ஆவது இடத்தில் பேட்டிங் விளையாடுவதால் அவரிடம் தொடர்ந்து 50 அடிக்க வேண்டுமென எதிர்பார்க்க கூடாது. 20 பந்துகளில் 40 ரன்கள் அடித்தால் போதுமானது. அதை அவர் தொடர்ந்து செய்தும் வருகிறார். அதனால் அவரை உலக கோப்பை டி20 தொடரில் வாய்பளிக்க வேண்டும்.
அவர் விளையாடியதைப் பாருங்கள். அவர் தேவையில்லை என எப்படி கூற முடியும்? இந்தியா எப்போதெல்லாம் தோல்வியாகும் நிலைமையில் இருக்கிறதோ அப்போதெல்லாம் அவர் சிறப்பாக விளையாடுகிறார். அவரது வயதினைப் பார்க்காமல் அவர் விளையாடுவதைப் பாருங்கள்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now