
If You Want To Complain About ‘Flat Pitches’ Then You Should Quit Cricket – Saeed Ajmal (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி கராச்சியிலும் நடந்தது.
இந்த 2 டெஸ்ட் போட்டிகளுமே டிராவில் தான் முடிந்தன. 2 போட்டிகளிலும் முடிவு கிடைக்கவில்லை. ராவல்பிண்டி மற்றும் கராச்சி ஆகிய 2 ஆடுகளங்களுமே பேட்டிங்கிற்குத்தான் சாதகமாக இருந்தன. பவுலர்களுக்கு கொஞ்சம் கூட ஒத்துழைப்பு இல்லை.
2 ஆடுகளங்களுமே படுமந்தமாக இருந்தன. ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ், ஸ்மித் ஆகியோர் ராவல்பிண்டி ஆடுகளத்தை விமர்சித்தனர். ராவல்பிண்டி ஆடுகளத்திற்கு போட்டி நடுவரே சராசரிக்கும் கீழான பிட்ச் என்று ரிப்போர்ட் செய்தார். வாசிம் அக்ரம் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கூட கடுமையாக விமர்சித்தனர்.