Advertisement
Advertisement
Advertisement

தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்!

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக இருந்து வரும் இஃஃப்திகார் அகமத் பரபரப்பான புகார் ஒன்றை ட்விட்டர் வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

Advertisement
தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்!
தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 17, 2023 • 02:12 PM

கிரிக்கெட் உலகத்தில் எந்த அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கும் இல்லாத வணிக ரீதியான மதிப்பும் உணர்வு ரீதியான பெருக்கமும் இந்தியா-  பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு உண்டு. இது இரு நாடுகளும் இருநாட்டில் ஏதாவது ஒரு நாட்டில் விளையாட வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. உலகின் எந்த ஒரு மூலையில் இருக்கும் நாட்டிலும் இந்த இரண்டு அணிகள் விளையாடினாலும் மைதானம் ரசிகர்களால் நிரம்புவது உறுதி. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 17, 2023 • 02:12 PM

அதேபோல் போட்டி எந்த நேரத்தில் பார்க்கக் கிடைத்தாலும், இருநாட்டின் ரசிகர்களும் முழுவதுமாக பார்ப்பதும் உறுதி. இந்த நிலையில் அரசியல் காரணங்களால் இரண்டு அணிகளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சிலபல காலமாக கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகள் மோதிக் கொள்ளும் போட்டி எப்போவாதுதான் நடக்கிறது. எனவே இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு தரும் முக்கியத்துவம் என்பது வேறொரு உயரத்திற்கு சென்று விட்டது.

Trending

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக இருந்து வரும் இஃஃப்திகார் அகமத் பரபரப்பான புகார் ஒன்றை ட்விட்டர் வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார். அந்தப் புகாரை அவர் எலான் மஸ்க் ஐடியை குறிப்பிட்டு புகார் செய்திருக்கிறார். நவாஸ் என்கிற பெயருடைய ட்விட்டர் ஐடி இப்திகார் அகமது கூறியது போல “இந்தியாவுடன் விளையாடுவது தெரு குழந்தைகளுடன் விளையாடுவது போலானது” என்கின்ற ஒரு தவறான தகவலை பதிவு செய்திருந்தார்.

 

தற்பொழுது இந்த ட்விட்டை எடுத்து இஃப்திகார் அகமது கூறும் பொழுது “நான் இதுவரை சொல்லாத ஒன்றை இதில் அறிந்திருக்கிறேன். உண்மையில் எந்த ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரரும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட மாட்டார்கள். தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். வெறுப்பை பரப்புவதாக இந்த ஐடியின் மீது நான் புகார் அளிக்கிறேன். தயவுசெய்து இந்த ஐடியை தடை செய்யவும்” என்று கேட்டிருக்கிறார்.

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில் பாகிஸ்தான் அணிக்கு மிடில் வரிசையில் இவர் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். ஆசியக் கோப்பையில் இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அப்போது களத்தில் இருந்து வென்று கொடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement