Advertisement

ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எமிரேட்ஸ்!

ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 27, 2024 • 11:17 AM
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எமிரேட்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது வசீம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த குசால் பெரேரா - ஆண்ட்ரே ஃபிளெட்சன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Trending


தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தலா 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஒருமுனையில் அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் அம்பத்தி ராயுடு 7 ரன்களுக்கும், டிம் டேவிட் 20 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர். 

அதன்பின் 37 ரன்களில் நிக்கோலஸ் பூரானும் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் முகமது ஜவதுல்லா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஷாஷார்ஜா வாரியர்ஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் ஒரு ரன்னுக்கும், டாம் கொஹ்லர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனையடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய நிரோஷன் டிக்வெல்லா 22 ரன்கள் எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, மற்றொரு தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 46 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 12.1 ஓவர்களிலேயே ஷார்ஜா வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. எமிரேட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், வக்கார் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement